இன்னுமொரு கண்ணி பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
'இன்னுமொரு கண்ணி' கதையின் கருவிற்கு ஏற்றால் போல் தலைப்பும் வாசகனுக்கு விழிப்பூட்டும் வண்ணம் அமையப்பெற்றள்ளது என்றால் மிகையாகாது.பதற்றமாக தொடங்கும் கதையின் போக்கு இறுதியில் மிகத்தெளிவாக முற்றுப்பெறும் வண்ணம் அமையப்பெற்றள்ளது.கதையில் வரும் பாலகிருஷ்ணன்,வரது ஆகியோரின் கதாபாத்திரத்தின் மூலம் அழகான வாழ்வியல் படிப்பினை எமக்கு எய்தப்படுகிறது.அதாவது இருவரும்20 வருட நண்பர்கள் தங்களது மகிழ்ச்சி,தூக்கம் என்பவற்றை பகிர்ந்து கொண்டு வாழ்தல் என்பன பந்தங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
கதையின் பிரதான பாத்திரமான தன் நண்பனின் மகன் கணேஷன் சுந்தரி எனும் விபச்சாரியின் இல்லத்திலிருந்து நடுநிசியில் வெளியாவதை கண்ட பாலகிருஷ்ணனின் மனநிலை உண்மையை தன் நண்பனிடம் எத்தி வைத்த முறைமைகள் ஒரு பிரச்சனையை எப்படி தீர்க்க முனைய வேண்டும் என்பதை
சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
மகனின் செயலை அறிந்த வரதராஜனின் மனம் படும் வேதனை,மகன் மேல் வைத்த நம்பிக்கை வீண் போய் விட்டது எண்ணி மனதோடு கேள்வி கேட்கும் கதை வரிகள்,இருந்தும் தன் மகன் அறியாமல் தவறு இழைத்து விட்டாலும் அவனை கொள்ளை நோய்கள் தாக்கி இருக்குமா..? என்று ஐயப்பட்டு வைத்தியரிடம் பரிசோதனைக்காய் அழைத்து செல்லவேண்டும் என்ற தொப்புள்கொடி,மகனை பின் தொடர்ந்து செல்லும் போது அவனை அழைத்தால் சமுதாயம் தன் மகனின் பெயரை இழிவு படுத்துமோ.? என்று அவனை அழைக்காத மனப்போராட்டத்தை ஆழமான வரிகள் மூலம் சொல்கின்றார் எழுத்தாளர்.
தன் மகனை நினைத்து வாடியிருந்த கணவனின் முகத்தை பார்த்து மனம் வருந்தும் லட்சுமி எனும் மனையாளின் வருடல்கள் கணவன் மனைவிகளுக்கிடையிலான ஆழமான இல்லற சிநேகிதத்தை வெளிப்படுத்தி ஒரு வாழ்வியல் தத்துவத்துவத்தை படிக்கும் வாசகனுக்கு சொல்கிறது என்றால் ஒரு போதும் மிகையாகாது மலர்களுக்கு வாசம் என்பது சுய விளம்பரமா.....?....
வரது தன் மகனின் அறைகளை பரிசோதிக்கும் போது மகன் கணேஷனால் அணியப்பட்ட சட்டை கதவு மூலையில் ஒழிக்கப்பட்டிருப்பதை கண்டு மகன் நிஜமாகவே குற்றம் செய்திருப்பான் என்று ஆக்ரோசத்தோடு அவனை தாக்கும் போது தந்தையின் மனம் புரிந்து மகனால் முன்வைக்கப்படும் உண்மைகள் மனம் உருகும் வருடல்கள்.
இந்த உலகில் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் கொள்ளை நோயான எய்ட்ஸை முற்றாக அழிக்க இளைய சமுதாயம் முன்வரவேண்டும் என்பதை மகன் கணேஷன் மூலமும்,அதற்கான ஒத்துழைப்புக்கள் பெற்றோர்களால் வழங்கப்பட வேண்டும் என்பதை தந்தை வரது மகனோடு இணைந்து போராட முனையும் பாங்கினையும் படைப்பாளர் ஆழமான வரிகளால் மனதில் ஆணையாய் குத்தும் வண்ணம் உண்மைகளால் வருடி தூங்குகின்ற இளைய சமுதாயத்தை உலகை திருத்த கண் விழிக்க அழைப்பு விடுத்து கதையை நிறைவு செய்வதாக அமையப்பெற்றுள்ள விதம் கருவிற்கு உயிர் சேர்க்கிறது
மேற்படி திறனாய்க்கட்டுரை என் சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர்:மு.ஹ.மு. ஸர்பான்
இடம்:ஓட்டமாவடி-03 இலங்கை
தொலைபேசி இல:94 756795952
தேசிய அடையாள அட்டை இல:972410063v