ஒதுங்கிய ஒற்றைப் படகினுள் மெல்ல அசைகிறது கடல்

கரைத்தட்டிய ஆறு
கைக்கட்டி ஓடையானதால்
ஒதுங்கிய
ஒற்றைப் படகினுள்
மெல்ல அசைகிறது கடல்.

தூரத்து கலங்கரை
மறைந்த பொழுதுகள்
மறக்காத வழிகள்
கடந்திட்ட கணங்கள்
கடக்காத கனவுகள்
உற்சாக மனிதர்களென
தன்னுள் புதைத்துக்
காத்திருக்கிறது
தனக்கான
காலத்திற்காக...

வருமா? வராதா?
வலியின் வலி
வழிகிறது விழிகளில்...

மனதில்லா மனிதனாய்
கடந்திடும் பொழுதில்
சற்றேத் திரும்பி
சலனமில்லா
பார்வைக் கூடப்போதும்

ஊருக்குள் ஓடியாடி
காலத்தின் கணமேறி
ஒற்றையாய்
ஒதுங்கி நிற்கும்
மனிதனையும

புரிந்துக் கொள்ள...

எழுதியவர் : கார்த்திக் (9-May-15, 4:05 pm)
பார்வை : 87

மேலே