ஏழைக் கவிதைகள்
எனக்குள் கர்ப்பமாகி..
எனக்குள்ளேயே கரைந்துவிடும்-எனது
எழுத மறந்த கவிதைகளில்...
எனக்கு மட்டுமே தெரிந்த
என் சில விம்பங்களும்
புதைந்து விட.... -நான்
செய்வதறியாது தவிக்கின்றேன்.
எனக்கென நேரமொதுக்க
எனக்கே நேரமில்லை.. -பாவம்
என்ன செய்யும்? -என்
ஏழைக் கவிதைகள்.
-ரஞ்சித் குலசிங்கம்-
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
