எரியும் பசியை அணைக்கும் விறகு - பூவிதழ்

எரியும் வயிற்றை அணைக்கும் விறகு -
பசியை விற்கும் பாமர கூட்டம் -
பட்டா போட்டு பங்களா கட்டுது
காட்டை வேட்டையாடும் பணக்கார புலிகள் -
படம் வரைந்து புள்ளியியல் போடுது படித்த கூலிகள் -

வனத்தை அழித்து வாழுமிடம் அமைத்து - கூடுகள் கலைத்து குளிர் தேட மலை முடி தொடும் மூடா - எந்த மிருகத்திடமும் இல்லை இந்த மனிதத்தனம் -

புலிகள் கண்டு கிளிகள் கொண்ட தேயிலைத் தோட்ட சருகுகளை - எலி என்று புலி தின்று போனதே - புரியவில்லையா புதிரென்று இயற்கையை -

பசுந்தோல் போத்தி மனித சதை தின்னும் மானிடா- மன்னிக்காது இயற்கையும் உன்விளையாட்டை -

கைகோர்க்குது கரை வேட்டியும்
கருப்பு பண புள்ளியும் - மலையெல்லாம் மைல் கல்கள் வெள்ளையடித்து
விவசாயம் செய்யுது !

மனிதம் கொன்ற உயிரை - புலியென்று கொள்வதா ? புரிந்தவர்க்கெல்லாம் விதை செய்த விதி எது ? சதி எதுவென்று ?

மனிதவளம் தழைக்க ! மலைவளம் காப்போம் !

எழுதியவர் : பூவிதழ் (18-Jan-14, 2:43 pm)
பார்வை : 197

மேலே