தமிழன் குடியேறிய நாட்டவற்கு
இவன்குடி மறந்து மொழியையும் தவிர்த்து
உன்குடி ஏற்று பற்றுடன் இருப்பினும் உங்களில் ஒருவனாய் ஏற்கும் மட்டும்
பொருட்படுத்தவில்லை யாம் - மாறாய்
பேதம் கருதி பிரிவினை கண்டு
அடிமைப்பட்ட சேதி தெரிந்தால்
தலையிட வருகிற படையினை அறிவீர்
குமரியில் எஞ்சிய நாடொன்றுள்ளது
வந்தேரியவனை வாழ்வித்த வம்சம்
விட்டுச்சென்றாலும் விட்டுக்கொடுப்பதில்லை