தர்க்கம் தர்மம்

உச்சியில் உதிரும் தர்க்கத்தை உதறிவிட்டு
எழுதிய சட்டம் எதிராய் இருப்பினும்
பணம் பண்ணும் நோக்கில்
எழுத்துக்களை திரிக்க அர்த்தத்திற்கு வக்கில்லை
வார்த்தையில் விளையாட சட்டம் ஒன்றும் கவிதை இல்லை
தர்மத்தை வரையறுக்க முற்பட்டதால்
வாதங்களும் விவாதங்களும் விதண்டாவாதங்களும்
விரிந்து கொண்டே செல்கிறது
வழக்குஇருப்பு கரைய வழியில்லை
நியாயம் உணர எழுதிய சட்டம்
கேள்விகளோ ஆனால் சட்டத்தை நோக்கி
அன்று அரசன் கொடுத்த நீதியை ஏற்றுக்கொள்ள
சாசனமும் இல்லை சட்டமும் இல்லை
உரிமைகள் பிறந்தது தான் தவறோ
எந்த தவறில் குற்றமில்லை என்று
கண்டறிய முடிந்த அறிவுடன்
மனிதனுக்கு இன்னொரு முகம் (தலை)
பொய்யிற்கு சாயம் போட முடிந்தது
எங்கே போய் முடியும் இதெல்லாம்
தர்மத்தின் தலையை காப்பவன் யாரோ?

எழுதியவர் : Ashok (27-Aug-17, 8:29 pm)
பார்வை : 57

மேலே