சாமி யார்

"உன்னுள்ளே
இறைவன்
என்றருளிய
எளியவனை
புறந்தள்ளிவிட்டு?
உங்கள்
யாவருக்கும்
இறைவன்
யானென்ற
பிற்போக்குவாதியை
பின்பற்றும்
மூடர்களே!
சாமியாரை
தேடாமல்
சாமி
யார்
என்பதையாவது
தேடுங்கள்
பிறவி
பெருங்கடலை
நீந்துவதற்கு"

எழுதியவர் : இராஜசேகர் (27-Aug-17, 5:34 pm)
பார்வை : 73

மேலே