சன்னல்

சன்னல்
=====================================ருத்ரா

சிரித்து விட்டு மறைகிறாய்
நீ மீண்டும்
முகம் காட்டும் வரை
இந்த கம்பிகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
"இது என்னடா கம்பி எண்ணும்
விளையாட்டு?''
அப்பா கட்டு கடுப்புடன்
கூறி விட்டுப்போகிறார்.
அப்போது பார்த்து
உன் முகத்தைக்காட்டுகிறாய்.
அந்த உன்பார்வையில்
நீ பேசிய பேச்சுகளுக்குள்
நான் நுழைந்து பார்க்க
மில்லியன் கூகிள் பக்கங்கள் வேண்டும்.
"இது என்ன கம்பியூட்டரா?
உன் தலையை இப்படிப்புதைத்துக்கொண்டு
கிடக்கிறாயே?"
கலாய்த்தது என் தங்கை.
ஆனால்
எனக்கு இந்த துருப்பிடித்த
கம்பிகளில் எல்லாம்
உன் "பிளாட்டினப்புன்னகை" அல்லவா
பூசப்பட்டு இருக்கிறது.
இங்கே தான் என் தவம்.
அடுத்து நீ முகம் காட்டும் வரை...

========================================

எழுதியவர் : ருத்ரா (27-Aug-17, 4:50 pm)
Tanglish : sannal
பார்வை : 67

மேலே