உலக ஔி தின கவிதை

🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

*உலக ஔி தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

கண்களில்
பார்வை இல்லையென்றால்
காட்சிகள் தெரியாது....
உலகில் "ஒளி இல்லை " என்றால்
அந்தக் கண்களே தெரியாது...!

புறஇருளைப் போக்குவது
ஞாயிறு ஒளி....
அகஇருளைப் போக்குவது
ஞான ஒளி...
அறியாமை இருளைப் போக்குவது
அறிவொளி....
அகல் விளக்கில் இருப்பது
ஆன்மீக ஒளி....
குத்து விளக்கில் இருப்பது
குடும்ப ஒளி....
மெழுகுவர்த்தியில் இருப்பது
சுடராெளி .....
நிலவில் இருப்பது
அழகொளி....
நெருப்பில் இருப்பது
வெப்ப ஔி....
சூரியனில் இருப்பது
மூலயொளி....!!!

ஒளியின்றி போனால்...
தாவரங்களில்
ஒளிச்சேர்க்கை ஏது?
பறவைகளுக்கு
இரை ஏது?
விலங்குகளுக்கு
விழிப்பு ஏது?
மனிதர்களுக்கு
இரவு பகல் ஏது ?
கிழக்கில் விடியல் ஏது ?
விழிகளுக்கு
பெருமை ஏது ?
நிலவு ஏது ? சூரியன் ஏது?
நீயும் நானும் ஏது...?

இறைவன் படைப்பில்
ஒளியே முதன்மையானது
அதனால் தான்.....
சிலையிலும்
சிலுவையிலும்
வெறுமையிலும்
இறைவன்
காட்சியளிப்பதை விட
"ஔியிலேயே !"
அதிகம் காட்சியளிக்கிறான்...!!!

இயற்கை
ஒளி மூலங்களும்
செயற்கை
ஒளி மூங்களும் தான்
மனித வாழ்க்கை
இருள் கடலில்
மூழ்கிவிடாமல்
பாதுகாக்கிறது....
இவ்வுலக அழகை
ரசிக்க வைக்கிறது....
இவ்வுலகச் சுகத்தை
அனுபவிக்க வைக்கிறது...
இவ்வுலக வாழ்க்கையை
நேசிக்க வைக்கிறது.....

ஒளியைப் பற்றிச்
சொல்லும்பொழுது
எடிசனைப் பற்றி
சொல்லாவிட்டால்
"வார்த்தைகளும் வருந்தும்
எழுத்துக்களும் ஏங்கும்.....!"

ஒளி கொடுத்த சூரியன்
ஓய்வு எடுக்கப் போனபோது
இவ்வுலகம் இருளால்
முற்றுகையிட்டதைக் கண்ட
எடிசன்....
ஒய்வு எடுக்காமல் உழைத்து
மின்விளக்கைக் கண்டுபிடித்து
ஔி கொடுத்து
இருளை
வீடு வீடாக தெரு தெருவாக
அடித்துத் துரத்தியவர்
அவர் தானே...!
அனால்தான் அவர்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
"வெளிச்சமாக....!"

ஔியை வணங்குவோம்...!
ஔியாக வாழ்வோம்....!

*♥அனைவருக்கும் உலக ஔி தின வாழ்த்துக்கள்*♥
நல்வாழ்த்துகள்.....


*கவிதை ரசிகன்*

🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-May-24, 6:19 pm)
பார்வை : 22

மேலே