யாரடா நீ
உனக்காக நீயே உருவாக்கிக்கொண்ட 
சுயநல நியாயங்கள் !
உனக்கென வரும்போது மட்டும் 
எல்லாமே நியாயமாய் தெரிவதின்
மாயம்தான் என்னவோ ?
 
எவருடைய வருத்தங்களிலும் 
எவருடைய துன்பங்களிலும் 
எவருடைய வறுமையியிலும் 
பங்குகொள்ள பரந்த மனமில்லை உனக்கு -
யாரடா நீ ?
அவரவரின் விருப்பமில்லாமலேயே 
அடுத்தவர்களுடையதை தனதாக்கிக்கொள்ளும் 
கொடூர குணமுடையவனே -
யாரடா நீ ?
பொதுநலம் பாராமல் 
தன்னலத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடும் 
மனிதநேயம் இல்லாத மிருகமே -
யாரடா நீ ?
உயிர்களின் வதையை மறந்து 
உணவாக்கி கொண்டவனே 
உனக்கு, உணர்வுகளின் வலி என்றைக்கு புரிய போகிறது ?
நேர்மையையும் நீதியையும் மறந்து 
நெடுங்காலமையான உனக்கு 
எடுத்துகாட்டாக  எதை சொல்லி புரியப்போகிறது ?
கொலையைக்கூட கலையாய்  கற்றுக்கொள்ளும் அளவிற்கு
கொடூரமாய் இறுகிப்போன உன் இதயத்தில் 
இரக்கத்தின் ஈரம் இருக்க வாய்ப்பே இல்லை !
போதிப்பவர்களையும் போதனைகளையும் 
புறம் தள்ளிய நீ 
பொல்லாத சிந்தனையை விதைப்பதில் 
வித்தகன் ஆகிவிட்டாய் !
உனக்குள் இருக்கவேண்டிய இரக்கத்தையும் மனிதத்தையும் 
எங்கே,என்று துளைத்தாய் ?
மனிதன் மனிதன் என்று மார்தட்டிக்கொள்ளும் உனக்குள் 
மனித நேயமும் , மனித தன்மையும் 
இல்லையேயடா  ?
யாரடா நீ ?
 
                    
