இன்றியமையாதது

அருகில் சென்றேன்
நெருங்கிப் பழகியது
கடல் அலைகள்

தொலைவில் சென்றேன்
துரத்தியது
கானல் நிஜங்கள்

காலையில் தொடர்ந்தேன்
கண்கள் மூடி விடாத
சூரியன்

தூண்டிலிட்டு பிடித்த மீனை
கண்டேன்
மண்டியிட்டு கறந்த பாலை
கண்டேன்

முத்தமிட்ட கன்று
சத்தமிட்ட குயில்

இரவினில் கண்முழித்தேன்
அலையாக நகர்ந்த
மேகத்தின் மாறுவேடம்

வலைவிரித்த வானமும்
தலைவிரித்த சூரியனும்

தேதியை கிழித்து
பாதியை தொலைத்து
மீதியை தேடிய
நாளை பொழுது

இன்றியமையாதது


-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (15-May-24, 9:59 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : yinriyamaiyaathathu
பார்வை : 40

மேலே