நம்பிக்கை கொள்
வாழ்க்கை அழகானது..!
நட்பு சாமரம் வீசிய
கயவர்கள்
மனம் சிதறிய போதும்..!
இரட்டை நாக்கு
வேடதாரிகள்
இதயம் கிழிந்த போதும்..!
நயவஞ்சகரின்
துரோகங்கள்
நெஞ்சம் சிதைந்த போதும்..!
துன்பங்கள் கார்முகிலாய்
சூழ்ந்த போதும்..!
துவளாதே..!
வாழ்க்கை அழகானது..!
மேகங்களின் மோதல்
பிறக்கும்
இருளை கிழிக்கும் மின்னல் கீற்று..!
துன்பங்களுடன் மோதிப்பார்
பிறக்கும்
நம்பிக்கை ஒளிக்கீற்று..!
இரவு இருளை அள்ளி
பூசியதினால்தானே..!
அந்த நிலமகளே அழகு..!
நீயும் நம்பிக்கைதனை அள்ளி
பூசிப்பார் துவண்டுபோன
வாழ்க்கை அழகாய் தெரியும்..!
ஆயிரம் நிலவொளிகளா தேவை
காரிருளை கடக்க...?
சிறுவெளிச்சம் போதுமே..!
நம்பிக்கை விளக்கை ஏந்து...
மகிழ்ச்சி படிக்கற்கள் தோன்றும்..!
வாழ்வின் அர்த்தம் புரியும்..!
வாழ்க்கை அழகானது...
நம்பிக்கை கொள்..!