தந்தை இறப்புச் செய்திக்கூட
அரிதான நல் வாழ்வதனை
அருமைக்கண்டு வாழ்வதில்லை
அனல்மிகு சினத்தைக்கொண்டு
அழகு குணம் இழப்பதுண்டு
இரவு பகல் வேலைக்கொண்டு
இளமைக் காலம் தொலைத்துவிட்டு
இல்லம் அது சிதையுதே என்று
இரங்கல் கீதம் இசைப்பது நன்றோ
மேலைநாட்டு வேலை வேண்டும்
மேன்மை படுத்தும் பணமும் வேண்டும்
மென்றுத் தின்ன நேரமின்றி
மொண்டுக் குடிக்கும் உணவும் சரியோ
தந்தை இறப்புச் செய்திக்கூட
தாமதத்தை உருவாக்கும் வேலையிலென்று
தவிர்த்து பார்க்க எண்ணங்கொண்டு
தர்ம வாழ்வும் இன்று பெருகுதல் நன்றோ
காலத்தில் செய்யும் கடமை என்பது
கடுந்துன்பத்தை களையச் செய்வது
கண்டுக்கொள்ளாமல் கடந்துச் சென்றால்
காட்டாற்று வெள்ளமாய் கரைத்துவிடும் நம்மை .
---- நன்னாடன்.