நகரத்தின் கோலம்
புள்ளி வரிசையாய் இல்லை!
வளைவு வகையாய் இல்லை!
நெளிவு நேர்த்தியாய் இல்லை!என
நகரத்துக்கோலங்கள்
கண்டு அங்கலாய்ப்போரே...
பின் எப்படித்தான் இருக்கும்
நகரத்துக் கோலங்கள்..
எவன் வந்து நகை பறிப்பானோ
என்ற பதட்டத்தில் வைத்திருக்கும் நகரத்தின் கோலத்தில்...