விளக்கேற்றும் நேரம்
மழையின் துவானத்துடன் கண் விழிக்கிறது என் அதிகாலை;கோடிமுறை பார்த்துச்சலித்தாலும் விமர்ச்சனம் ஏதுமின்றி மௌனசட்சியாக நிற்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி ;விடைபெறுவதும் வீடுபேறு அடைவதும் சுலபமானதல்ல என்று கண்முன்னே கட்டியம் கூறுகிறது சுவர்க்கடிகாரம் ;பணியிடம் நோக்கி காதல் மனைவியுடன் சாலைபயணம் ,சுவர்விளம்பரம் பார்த்து சாலை விதிகளை மதித்து அந்திமயங்கி வீடு திரும்பியபின் திசைகளெங்கும் ஒளிர்கின்றது எங்கள் வரவுக்காக காத்திருந்த மின்விளக்குகள் !!!!!!!!!!!