ச ஜெகதீசன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ச ஜெகதீசன்
இடம்:  சின்னதாராபுரம்
பிறந்த தேதி :  08-Nov-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2019
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  10

என்னைப் பற்றி...

ஜோதிடராக இருக்கும் கவிஞர் .

என் படைப்புகள்
ச ஜெகதீசன் செய்திகள்
ச ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2019 10:38 am

மழையின் துவானத்துடன் கண் விழிக்கிறது என் அதிகாலை;கோடிமுறை பார்த்துச்சலித்தாலும் விமர்ச்சனம் ஏதுமின்றி மௌனசட்சியாக நிற்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி ;விடைபெறுவதும் வீடுபேறு அடைவதும் சுலபமானதல்ல என்று கண்முன்னே கட்டியம் கூறுகிறது சுவர்க்கடிகாரம் ;பணியிடம் நோக்கி காதல் மனைவியுடன் சாலைபயணம் ,சுவர்விளம்பரம் பார்த்து சாலை விதிகளை மதித்து அந்திமயங்கி வீடு திரும்பியபின் திசைகளெங்கும் ஒளிர்கின்றது எங்கள் வரவுக்காக காத்திருந்த மின்விளக்குகள் !!!!!!!!!!!

மேலும்

ச ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2019 9:38 am

பல்லை இளித்து /தலையைசொரிந்து /சொன்னவார்த்தை எதுவானாலும் சிரித்து வாங்குகிறான் கடன் /வேண்டாம் அது உன்காலைசுற்றும் பாம்பு /அது உன் உயிரை காவுகேட்க்கும் அதை நீ உணர்! அதைநீ உணர் !/வாழ்ந்துகெட்டவனின் வார்த்தைக்கு ஏது மதிப்பு /காலம் அவனையும் சிரித்தபடியே பார்த்துக்கொண்டு இருக்கிறது ...

மேலும்

ச ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2019 10:06 am

கடுங்காற்றோடு மழை பெய்துகொண்ட்டிருக்கிறது /ஓங்கிவளர்ந்த வேப்பமரத்தின் அடியில் கூட்டமாய் ஆடுகள் தலைகுத்தி நிற்கின்றன /பளீரென மின்னல் அடுத்தகணம் பேரிடியின் சத்தம் /மந்தையாடுகள் திசைக்கொன்றாய் சிதறியோடின /நான் பார்த்து ரசித்துகொண்டிருந்த அழகிய காட்சி முடிந்துவிட்டது !!!!.

மேலும்

ச ஜெகதீசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 11:58 am

கோயில்திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் மூன்றுநாட்களாக வந்துபோகின்றன இன்றே கடைசிநாள் !நேற்று ...உடல்முழுவதும் சே றுபூசி க்கொண்டு வலம்வருவது அக்னிசட்டி எடுப்பது அடியொற்றி அங்கபிரதட்சணம் செய்வது குழந்தைக்கு மொட்டையடிப்பது என வகைவகையான நேர்த்திகடன்கள் முடிந்தன //இன்று ..கரிநாள் விழாவின் திருநாள் ...உறவுகள் வீடுதிரும்பும் பெருநாள் ..//அம்மனின்பெயாரால் வளர்க்கப்பட்டு வெட்டப்பட்ட சேவல்களும் ஆட்டுகிடாய் களும் உண்டுமுடித்து உடன்பிறப்புகளும் உறவுகளும் ஊர்திரும்பும் மாலையில் ...வீட்டின் பின்புறம் கோழிகளுக்கு இரைபோட்டுகொண்டிருந்தாள் பாட்டி !!!

மேலும்

தாங்கள் கவிதை பாட எடுத்துக் கொண்ட களம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் தாங்கள் எழுதியது கவிதை வடிவில் அல்லது கட்டுரை வடிவில் அல்லது கதை வடிவில் கூட இல்லை; எனவே நன்றாக பயிற்சி செய்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். 26-Jun-2019 5:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே