நானும் நீயும்

அம்மனை காண
கோயிலில்
நான்!!

அம்மன் பார்க்கும்
வரிசையில்
நீ!!

அம்மன் பார்த்த
வரிசையில்
நான்!!

பொன்நகை பூமாலை
அலங்காரத்தில்
அம்மன்!!

பொன் நகைகளில்லா
புன்னகையில்
நீ!!

அம்மனின் நேர்
பார்வையில்
நீ!!

உன் ஓரப்பார்வை
ஏக்கத்தில்
நான்!!!

எழுதியவர் : பெல்ழி (8-Sep-21, 8:14 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : naanum neeyum
பார்வை : 153

மேலே