அவளும் அவனும்
அவன் மேகநாதன் பெயர்ப்போல் நிறத்தான்
அவள் வளர்மதி, மதிபோல் ஒளிரும் நிறத்தாள்
மேகத்தில் மூழ்கியும் பின்னே வெளிவரும்
நிலவுபோல் அவள் அவன் காதல் விளையாட்டு
ஒருவர்ப்பின் ஒருவராய் ஒருவரோடு ஒருவராய்
காட்சி தருவதும் போவதும்