மணிவாசன் வாசன்- கருத்துகள்


நிசப்த இரவில்
நிகழும் சுகப்பிரசவம்
அல்லி

சிவப்பு விளக்கு
சிக்கிக் கொள்கிறது விட்டில் பூச்சியும்
விபச்சார விடுதி


மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் கயல்

மௌனித்திருந்தான் விக்ரமாதித்தன்....
தலைகீழாகவே வேதாளம்...
இல்லாது போயின நீதிக்கதைகள் .

நீந்திக் கொண்டே
நிலவைச் சுற்றி பார்க்கிறது
நதியில் மீன்கள்

அருமை.

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்

அருமை. வாழ்த்துக்கள்

கோவிலில் கூட்டநெரிசல்
சுற்றிலும் பலத்த காவல்
உண்டியலுக்கு !


மறந்த நிலையில்
பழைய பொருட்கள்
உழவன் வீட்டில் கலப்பை !


சிந்திக்க வைத்தன தங்கள் ஹைக்கூ . வாழ்த்துக்கள்

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!

--

விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?

--


அருமையான சாட்டையடி... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜி. தொடரட்டும் தங்கள் ஹைக்கூ பயணம்.

நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!


முட்டைக்குள் கருவாய் உன்னை
வைத்தேன்
நீ உயிர்பெற்று
நடமாடினாய்
நான் உடைப்பட்டு
தெருவாகினேன்


அருமையான கற்பனை.

தூக்கணாங்குருவியென
நீயும்
கூடென நானும்
ஒன்றாய் வாழ்ந்திருந்தோம்...

நீ பறந்துவிட நான்
தொங்கிக்கொண்டிருக்கின்றேன்
உயிர் இழந்த வெறும் கூடாய்.

அழையா விருந்தாளியாய் உன் நினைவும்
அடுக்களைக்குள் பூனையாய் என் காதலும் அடம்பிடிக்கிறது
வெளியேற மனமின்றி.

ஆண் மனதின் நேசம் தான்
வான் அளவை மிஞ்சி விடும்
அருகில் நீ இருந்திருந்தால் உனக்கும் அது புரிந்திருக்கும்.அழகாய் ரசித்தேன். வாழ்த்துக்கள்

கச்சையோடு போர்க்களம்
வருகிறாய்...
நிராயுதபாணி என்கிறான்
மூடன்...
பாவம் பெண் என்கிறான்
கோழை... உன்னிடம்
தோற்றுவிட
உற்று நோக்கியபடியே....
வீரன்.....!!!

ம்ம்ம்ம்...... இப்படியும் கற்பனையா... அருமையிலும் அருமை.

நீ கடலாக இருக்கிறாய்
நான் அலைகளுக்கு பயந்து
ஆற்றில் குதிக்கிறேன்
அதிலும்
சேருமிடம் நீயென தெரியாத அப்பாவியாக...


படித்து ரசித்து சிந்தித்து வியந்தேன். வாழ்த்துக்கள்.

பட பட வென்று மூடித்திறக்காதே
புறா விழிகளை …..
சிந்திவிடப் போகிறது
இமைச் சிறகில் சிக்கியிருக்கும் என் இதயம்

முத்தங்களால் என்னை
காயப்படுத்து ;
உன் காயங்களுக்கெல்லாம்
என் முத்தங்களைக் களிம்பாக்குகிறேன்

உன்னை எவ்வளவுதான்
ஊற்றி ஊற்றி நிறைத்தாலும்
காலியாகவே கிடக்கிறது கிண்ணம் ;
உன்னை எவ்வளவுதான்
வாரி வாரி இறைத்தாலும்
தீராமல் ததும்புகிறது எண்ணம் !வேறு என்ன வேணும். இது போதும் காதலுக்கு

ஈர விழிகளுடன் நான்
எழுதிய எந்த வரிகளிலும்
நீ நனைந்தது இல்லை


ரசித்து படித்தேன்

புருவமும் பருவமும் சேர்ந்து
வளைக்கப்பட்ட
உன் விழிக்கணை ஒரு சக்கர வியூகம்.
இதில் தப்பி வருவேனென்று
நம்பிக்கை இனியில்லை எனக்கு.
இறந்தும் இருக்கிறேன் எப்போதும் உனக்குள்


அழகு வரிகள்

கழுத்தறுப்பட்ட சேவல்
கலப்பையில் சிக்கிய புழு
காதல் கொண்ட என் இதயம்
எத்தனை கூர்மையடி உன் நினைவுகளுக்கு...


வார்த்தைகள் இல்லை.

உட்புறமாக தாளிடப்பட்டிருக்கும்
உன் வீட்டிலிருந்து நீயும்
என் வீட்டிலிருந்து நானும்
காணாமல் போய்விடலாம்.
பயப்படாதே.
எல்லோரும் பணப்பெட்டியில்
கண்களை வைத்துப் பூட்டிவிட்டு
உறங்குகிறார்கள்


எப்பிடி சொல்லுவது என்று தெரியவில்லை. அருமை. வாழ்த்துக்கள்.

என் கல்லறையில்
சன்னல் வையுங்கள்
கஸல் கேட்டு
கால் கொலுசோடு
காதலி வரக்கூடும் ...!!சுப்பர் ..... சூப்பர்.....


முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

ரசித்தேன்

நீ பார்த்து சென்ற கடைசி பார்வை,
என் மிச்ச உயிரை உடலிலேயே பிடித்து(வைத்து)ள்ளது....

அருமை

விருது பெரும் படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மணிவாசன் வாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே