திரிசங்கு நிலை

"பொய்" சொன்னா
"சாமி" கண்ணை குத்திடும்
என்று சிறு வயதில்
என் பாட்டி சொன்னது...!!

"உண்மை" சொன்னா
"ஆசாமி" கத்தியால்
குத்தி விடறான்..!!

மொத்தத்தில்
"குத்து" மட்டும்
உறுதி என்று
புரிந்து விட்டது...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jul-21, 5:17 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 142

மேலே