பயம் என்னும் நோய்

நோய் பாதி பயம் பாதி
என்பது போல் ...
ஒரு நோயின் தாக்கத்தைவிட
மனிதனின் மனக்கவலையே
உடலை சிதைத்துவிடும் ..!!

இப்போது
எல்லோர் மனதிலும்
"கொரோனா" நோயின்
தாக்கத்தை விட
பயம் தான் தெரிகிறது ..!!

நோய் பற்றி மருத்துவமனை
மருத்துவர்களும்
செவிலியர்களும்
சொல்வதை
மட்டும் கேளுங்கள்..!!

"Whats App " மருத்துவர்களின்
மருத்தவ தகவல்களை
வாசிப்பதை நிறுத்துங்கள்
அல்லது அதனை
புறம் தள்ளுங்கள் ..!!

விழித்திரு

தனித்திரு

முக கவசம் அணிந்து செல்

தனி நபர் இடைவெளி கடைபிடி

அச்சம் தவிர்த்து
வேங்கையாக
நடைபோது

"கொரோனா" நம்மைவிட்டு
அஞ்சி ஓடிவிடும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-May-21, 1:45 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : bayam ennum noy
பார்வை : 549

மேலே