எல்லாமும் எந்நாளும்

வெளிவிருத்தம் பா

மூன்று அல்லது நான்கு நெடிலடிகள் கொண்டிருத்தல் வேண்டும், ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்றிருத்தல் வேண்டும், தனிச்சொற்கள் அனைத்தும் ஒரே சொல்லாக இருத்தல் வேண்டும், ஒவ்வொரு அடியிலும் ஒரே அடி எதுகை அமைதல் வேண்டும்

கெஞ்சியே கேட்காதீர் கடனை எந்நாளும் - யாரிடமும்
அஞ்சியே வாழாதீர் என்றும் பயங்கொண்டு - யாரிடமும்
பஞ்சமே வந்தாலும் பொய்யுரை கூறாதீர் - யாரிடமும்
நெஞ்சமே வெடித்தாலும் உயர்த்தியோரை எள்ளாதீர் - யாரிடமும் ---- 1

பிறையையும் மூன்றாம் நாளிலே காண்பதும் - வளர்ச்சி
குறையையும் சரிசெய்து நல்லறிவால் வெல்வதும் - வளர்ச்சி
குறைவாக பொருளைக் கொண்டே முன்னேறுவதும் - வளர்ச்சி
இறையின் அருளினால் கலைகளை அடைவதும் - வளர்ச்சி ---- 2

இளமையில் நன்றான கல்வியை பெறுதலும் - பாக்கியமே
வளமை மிகுந்த நிலத்தினை பெறுதலும் - பாக்கியமே
களவுமனம் இல்லாத முதலாளியின் வியாபாரம் - பாக்கியமே
பிளவில்லா நண்பர்கள் எந்நாளும் உடனிருத்தல் - பாக்கியமே ---- 3.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-May-21, 10:05 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 90

மேலே