நடமாடும் நதிகள் பகுதி 3

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------

நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------

அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------

மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

ஒட்டடைகளால்
நிறைந்திருக்கிறது
வீடற்றவனின் கனவு...
-----------------------------------------------------

கடைசியில் ஒரு செல்பியோடு
முடிகிறது
நவீன சவ அடக்கம்
-----------------------------------------------------

திரும்பிப் பார்க்கையில்
பின்னால் மறைகிறது
திரும்பவும் பார்ப்பது...
---------------------------------------------------

நூலகத்துள் உட்கார்ந்தே தூங்குபவன்
விழுந்து கொண்டேயிருக்கிறான்
புத்தகமாய்
----------------------------------------------------

முன்னால் தூக்கிப் போட்டாய்
சற்று நீளமான ஹைக்கூ
ஜடையானது
----------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (8-Feb-16, 7:53 am)
பார்வை : 680

மேலே