பல துளி கண்ணீருக்கு சொந்தமாக்கிவிட்டாய் நீ 555

***பல துளி கண்ணீருக்கு சொந்தமாக்கிவிட்டாய் 555 ***


ப்ரியமானவளே...


என்னை பிரிந்து இத்தனைநாள்
நீ இருந்துவிட்டாய்...

மீதி நாட்களையும்...

நீ என்னை முழுமையாக
மறந்து வாழ்ந்துவிடு என்கிறாய்...

எந்த நாளும் எனக்கு
சொந்தமான நாள்தான்...

மகிழ்ச்சிகளை
கொடுக்கும் சில நாட்கள்...

அனுபவத்தை
கொடுக்கும் சில நாட்கள்...

நினைவுகளை
கொடுக்கும் சில நாட்கள்...

ஒருதுளி
அன்பு கொடுத்தாய்...

பல துளி கண்ணீருக்கு
சொந்தமாக்கிவிட்டாய்...

காற்று
கண்களுக்கு தெரிவதில்லை...

உயிர்வாழ
தேவை காற்று...

நீ என்
எதிரில் வருவதில்லை...

உன் நினைவு இல்லாமல்
நான் உயிர் வாழ்வதுமில்லை...

உன்னை காணாமல்
இருக்க பழகிவிட்டேன்...

உன்னை நினைக்காமல் இருக்க
இன்னும் பழகவில்லை நான்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (14-Jun-21, 5:17 pm)
பார்வை : 797

மேலே