இன்னொரு இதயம் வேண்டும் 555

***இன்னொரு இதயம் வேண்டும் 555 ***


என்னவளே...


அழகனா கனவில்
பாதியில் எழுந்ததை போல...

உன்னை
தொலைத்துவிட்டேன்...

பகலெல்லாம் நினைத்து
பார்க்கும் நினைவுகளை போல...

நீ நினைவுகளை
கொடுத்துவிட்டாய்...

ஆயிரமாயிரம் பரிசு பொருள்கள்
பரிமாறி கொண்டாலும்...

உண்மை அன்புக்கு
கண்ணீரை போல...

உயர்ந்த பரிசுகள்
எதுவுமில்லை...

இதயம் உடையும்
வலிகளையும் காதல் கொடுக்கும்...

தாங்கிக்கொள்ள இன்னொரு
இதயம் வேண்டும்...

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது...

என்னிடம்
பேசாமல் இருக்க...

நினைத்தாலே
உள்ளம் வலிக்குதடி...

நாம் சேர்ந்திருந்த
நாட்களை நினைக்கையில்...

பாதியில்
நின்ற கனவும் நீதான்...

நான் தினம் தேடும்
நினைவும் நீதான்.....



***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Jun-21, 5:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2322

மேலே