கட்டிய பட்டுச்சேலை மேனியில் கவிதைபாட

பொட்டு வைத்த நெற்றியில் பூங்குழலாட
கட்டிய பட்டுச்சேலை மேனியில் கவிதைபாட
வெட்டிப் பார்க்கும் மின்னல் விழியாளே
திட்டமென்ன வோஉந்தன் மென்பஞ்சு நெஞ்சினில் !
-----------------------------------------------------------------------------------------------------

யாப்பார்வலர்களுக்கு மட்டும் :-

----சீரிலும் தண்பூ அழகு செய்யும் நாற்சீர் ஒரே எதுகை
கலிவிருத்தம்

பூங்/குழ/லா / ட ---நேர் நிரை நேர் --கூவிளங்காய் முன்
நேர் வந்த கூவிளந்தண்பூ
பட் /டுச் / சே / லை --- நேர் நேர் நேர் - தேமாங்காய் முன்
வந்த நேர் (லை ) தேமாதண்பூ

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-21, 10:21 am)
பார்வை : 61

மேலே