மென்மலர் பூச்சரம் கூந்தலில் ஆடிட

மல்லிகைப் பூச்சரம் கூந்தலில்
மார்கழிக் கோலம் விழியினில்
புன்னகை முத்துக்கள் யாழினில்
என்மனம் இசையுது யாழினில்
---இயல்புப்பா

மென்மலர் பூச்சரம் கூந்தலில்
மென்பனிக் கோலம் விழியினில்
புன்னகை முத்துக்கள் இதழினில்
என்மனம் இசையுது யாழினில் !

----ஒரே எதுகை அழகு செய்யும் வஞ்சி விருத்தம்

மென்மலர் பூச்சரம் கூந்தலில் ஆடிட
மென்பனிக் கோலம் விழிகள் எழுதிட
புன்னகை முத்து இதழில் உதிர்ந்திட
என்மனமோ யாழிசை யில்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

மென்மலர் பூச்சரம் கூந்தலில் ஆடிட
மென்பனிக்கோ லம்விழிகள் போட்டிட - உன்னெழில்
புன்னகை முத்து இதழில் உதிர்ந்திட
என்மனமோ யாழிசை யில் !

---ஒ வி நேரிசை வெண்பா

மென்பூச்சரக் கூந்தல்
மென்பனி விழிகள்
புன்னகை இதழினில்
என்மனம் யாழிசையில் !

----ஒரே எதுகை இருசீர் வஞ்சித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-21, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே