பேனா முனை
பேனா முனையில் இருந்து
வெளிவரும் வார்த்தைகள்
எழுதும் காகிதத்தை
காயப்படுத்துவதில்லை ..!!
ஆனால்...
வாசிக்கும்போது
சில சமயங்களில்
சில வார்த்தைகள்...
சில மனங்களை
காயப்படுத்தி விடுகிறது ...!!
சில மனங்களை
சிந்திக்கவும் செய்கிறது ..!!
அதனால்தான் ..
பேனாவின் முனை
கத்திமுனையை விட
வலிமையானது
என்பார்களோ ...!!
--கோவை சுபா