லொக் டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 10

10
"ஹாய் அம்மு... சொல்லு... உனக்கு தான் போன் பண்ண இருந்தன்" - ஆதி கதைத்துக் கொண்டு நகர்ந்தான்

"என்ன ஆதி... கலியாண வீடு செய்யேலாது என்று சொல்லுறாங்கள்... உண்மையா...?" - தமிழிசை

"அப்பிடியில்லை... பதினைஞ்சு பேருக்கு அனுமதி இருக்கு. அப்பா நாளைக்கு போய் கதைச்சிட்டு வருவார்... எப்பிடியும் நம்ம கலியாணம் நடக்கும். பயப்பிடாதே..." - ஆதி நம்பிக்கை கொடுத்தான்.

"அப்பாடா... நான் பயந்திட்டு இருந்தன். என்னடா இது நடக்காமல் போயிடுமோ என்று.. " - தமிழிசை

"அடிப்பாவி... இப்போ என்னை விட நீ தான் ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறாய் போல..." - ஆதி நக்கல் பண்ணினான்.

"பின்ன... இந்த முகூர்த்தம் தப்பினால் இனி ஐஞ்சு வருஷத்துக்கு பிறகாமல்லே... என்னால அவ்வளத்துக்கெல்லாம் காத்திட்டு இருக்கமுடியாது..." - வெட்கத்துடன் கூறினாள் தமிழிசை

"அடிக்கள்ளி... வெட்கம் வேற வருதா உனக்கு...." - ஆதி மேலும் சீண்டினான்

"ச்சீ... போடா... எருமை..." - மேலும் வெட்கப்பட்டாள் தமிழிசை

"அப்போ எனக்கு ஒரு கிஸ் தாவேன் டி செல்லப் பொண்டாட்டி..." ஆதி கிடைத்த சந்தர்ப்பத்தில் கேட்டான்

"என்னாது..." - தமிழிசை ஆச்சரியத்தில் கேட்டாள்

"முத்தம்மா... முத்தம்... " - ஆதி

"ம்ம்ஹும்... ஆசை தோசை தான்... உதெல்லாம் கலியாணத்துக்கு பிறகு தான்..." - தமிழிசை செல்லமாக கோவப்பட்டாள்

"அதான் கலியாணம் வரைக்கும் வந்தாச்சே... இனி என்ன அம்மு..." - ஆதி

"அதெல்லாம் முடியாது... தாலி கட்டினதுக்கு பிறகு தான்..." - தமிழிசை முடிவோடு கூறினாள்

"இதுல தான் டி ஒரு கிக் இருக்கு... உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு.... போ... போய் கலியாண வேலைகளை பாரு...." - ஆதி சலித்துக் கொண்டே கூறினான்

"ரொம்ப தான் காய்ஞ்சி போய் இருக்கிறாய்... பாவம் தான். ஆனாலும் இப்பிடியே இரு.... இன்னும் நாலஞ்சு நாட்கள் தானே..." என சிரித்தாள்

************************

ஆதி தனது நான்கைந்து நண்பர்களை கொன்பிரன்ஸ் கோல் இல் தொடர்பு கொண்டான்.

"என்ன மச்சி திடீரென்று எல்லோரையும் சேர்த்திருக்கிறாய்..." நண்பன்


"இன்னும் நாலு நாள் ல எனக்கு கலியாணம் டா... போலீஸ் அனுமதி எடுக்க அப்பா போயிருக்கிறார். 15 பேர்க்கு தான் அனுமதி இருக்கும் என்று நினைக்கிறன் டா... "

"ஒரு மாதிரி இந்த லொக்டவுணுக்குள்ளே நீ உன்ர வேலையை சிம்பிளா முடிச்சிடப் பார்க்கிறாய் என..." இன்னொரு நண்பன்

"அப்பிடி இல்லை டா... சூழ்நிலை அப்பிடியா இருக்கு... என்னை என்ன பண்ண சொல்லுற... கடைசி முகூர்த்தம் வேற..." - ஆதி

"சரி சரி மச்சி விடு... விடு... டெக்கரேசன் வேலைகள், வெளி வேலைகள் இருந்தால் சொல்லு... நாங்கள் வாறம்...."

"அதுக்கு தான் டா கோல் பண்ணினன். பெரிசா இல்லாட்டியும் சின்னதா ஒரு சோடினை, வாழை கட்டனும், சுவர் ல பெயர் ஒட்டனும். இப்பிடி சின்ன சின்ன வேலைகள் இருக்கு... நீங்கள் தான் டா ஹெல்ப் பண்ணனும்...." - ஆதி

"கவலைப்படாமல் இரு மச்சி.... எல்லாம் எங்க பொறுப்பு... சிறப்பா முடிச்சு தாறம்..."

"எங்களையும் சிறப்பா கவனிக்கோனும் மச்சி... விளையாட்டில்லை..." இன்னொரு நண்பன்

"அதெல்லாம் கவனிக்கலாம்... உனக்கு அதானே முக்கியம்... வந்து தொலை டா..." - ஆதி

"ம்ம்ம்ம்.... அப்போ ஓகே..."

"அடேய்... இன்னொன்று... தப்பா நினைக்க வேண்டாம் டா... கலியாண நாளன்று வீட்ட வரவேண்டாம் டா... தப்பா நினைக்காதீங்கடா..." - ஆதி

"இது நல்ல ஞாயமா இருக்கே... எடுபிடி வேலைக்கு நாங்கள் வேணும். கலியாணத்தன்டைக்கு காய் வெட்டிடுவாறாம்..." நண்பர்கள் கலாய்க்க தொடங்கினார்கள்

"டேய்.... டேய்... டேய்... நானே கஷ்டப்பட்டு எப்பிடியாவது இந்த கலியாணத்தை முடிச்சிடோனும் என்று யோசனையில் இருக்கிறன். உங்களுக்கு விளையாட்டா இருக்கு... ஆக்கள் கூடினால் கலியாணத்தையே நிற்பாட்டி போடுவாங்க டா எருமைகளா... சொன்னால் கேளுங்கடா..." - ஆதி

"அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. கலியாண நாள் முற்றான நாளே நாங்கள் எல்லோரும் ஒரே நிறத்தில் ஷேர்ட் போடுறது என்று உடுப்பு எடுத்தாச்சு... கிஃப்ட் கூட வாங்கியாச்சு... எல்லாத்தையும் என்ன செய்றதாம்..."

"அடேய்... விசரை கிளப்பாதீங்கடா... என்னை தாலி கட்டவிடுங்கடா... தப்பினால் ஐஞ்சு வருஷம் டா.... பார்த்து கீர்த்து செய்யுங்கடா.... வேணும் என்றால் அந்த செலவுக்கெல்லாம் நானே காசு தாறன். கையெடுத்து கும்பிடுறன் டா... வந்து எனக்கு வாய்க்கரிசி போட்டுடாதீங்கடா..." அழாக் குறையாக கெஞ்சினான் ஆதி

"சரி சரி... பார்க்க பாவமா இருக்கு... பொழைச்சு போ..." என சொல்லவும் தான் நிம்மதி ஆனான் ஆதி.


திருமணத்துக்கான அனுமதியை பெற்றுக் கொண்டதை அடுத்து கலியாண வேலைகள் சூடுபிடிக்க தொடங்கியது. தேவையானது எது தேவையில்லாதது எது என பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்கள். கலியாணத்துக்கு முதல் நாள் குழை வாழை மரம் கட்டி சிறிய சோடினையுடன் முடித்திருந்தார்கள் நண்பர்கள்.


(((கலியாண பேச்சு தொடரும்)))

எழுதியவர் : பெல்ழி (20-Sep-21, 1:34 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 197

மேலே