கண்டறியுங்கள் - மனமே காரணம் மனமே மருந்து

உடல் கண்ட எந்த ஒரு பிணியும், நோயும் இயற்கையானது ஆல்ல ; மனிதன் அறிந்தும் அறியாமலும் தன் அலட்சியதின்பால் ஏற்ப்படுத்திய செயற்கையான விளைவே !! அது உடலானாலும் மனமானாலும் சரி!! என்பேன் நான்!!
இதை நீங்கள் ஏற்றுக்கொள்பவரா??

அது எப்படி செயற்கையாகும் அதுவும் வியாதி?? என்பவரா நீங்கள்!!

உணவு பழக்கங்களின் பரிணாம வளர்ச்சி நாம் கொண்ட உடலின் பரிணாமத்தை மாற்றியிருக்கிறது.
அதை ஒப்புக்கொள்கிறீர்களா??
ஆம் என்றால் அதற்கு காரணம் யார்??
உணவின் தொன்மையை மாற்றியமைத்தது யார்?? அதை வியாபாரமாக்க முனைந்து உணவை துரிதமாகவும், தரமற்றதாகவும் மனிதனுக்கு சந்தைப்படுத்தி,கொண்டு சேர்த்தது யார் அதே சகமனிதன் தானே??

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு காரணமான மனிதன் அதன் வீரியதிற்கும் காரணமாகின்றான்!
நாம் தொழில்நுட்பத்தை கையாண்ட காலம் நம் பின் நிற்க , நம்மை தொழில்நுட்பம் கையாளும் காலத்திற்கு சிறு அடி தூரமே நம் நிற்கின்றோம்; விளைவு பிதியதோர் பிறழ்வு!
அது ஏற்புடையதாயின் அது ஒரு பரிணாம வளர்ச்சியின் ஆரம்பம் !!
இல்லையேல் அது ஒரு பரிணாம வீழ்ச்சியின் பின்னடைவு!!

தெளிவுற சொல்லவேண்டுமாயின் அது ஒரு புதிய பினியின்;வியாதியின்;நோயின் தொடக்கமே ஆகும்.
அத்தகைய நோய் மனதை ஆட்கொண்டாலும் உடலை ஆர்கொண்டாலும் அதற்கு மனிதனே காரணகர்த்தா!!

சரி இனி கதைக்குள் செல்வோம் ..
இன்று காலை ஒரு இரங்கல் செய்தி என்னை வந்தடைந்தது.
அது மனஅழுத்தம் காரணமான ஓர் இறப்பு.
அது என்னையும் என் எண்ண ஓட்டத்தையும் பின் நோக்கி அழைத்துச் சென்றது!

ஏனென்றால் அத்தகைய மன அழுத்த பாதிப்புகளை அதன்பால் அடைந்த இழப்புகளை கண்டும்,கேட்டும் அனுபவித்தும் இருக்கிறேன்.

அவை எதுவும் இயற்கையானது அல்ல !! நான் தொடர்கிறேன் முடிவு உங்களுடையது!!

என் அம்மாவின் அப்பா காலத்தில் இருந்து ஆரம்பிப்போம்

கணவன் உருட்டு கட்டையால் தலையில் தாக்கியது காரணமாக அந்த பெண் சித்த பிரம்மை பிடித்தவள் ஆகிறாள்.
இதையே காரணம் காட்டி கணவன் அந்த பெண்ணை பிறந்த வீட்டில் கொண்டு தள்ளினான்.
என செய்வது என அறியாத அந்த குடும்பம் , கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையை ஒரு பக்கம் வைத்து,மந்திரமாயம், பில்லி சூனியம்,மாந்திரீகம் என திசை தெரியாது சுற்றித்திரிந்தது.

இறுதியில் அந்த பெண்ணின் சித்த பிரம்மையையை போக்க கைகொடுத்தது பனங்கள்ளும் அதை குடிதப்பின் அந்த பெண் கொண்ட தூக்கம் தான்.
மனதை சாந்தப்படுத்தியது அந்த சோமபானம்.
அந்த சாந்தத்தில் தனக்கு தானே வைத்தியம் பார்த்துக்கொண்டது அவளது மனம்!!

காரணம் ; காரியம் - மனிதன்

அடுத்த தலைமுறை காலத்தில் மற்றும் ஒரு நிகழ்வு வேறு ஒரு வீட்டில் அரங்கேறியது.
அந்த சிறுமி எதை கண்டு பயந்தாள் என தெரியாது.
அந்த பயத்தை போக்க அவள் தந்தை கையாண்ட மருத்துவம்,ஊசியை சூடேற்றி அந்த சிறுமியின் நெற்றியில் சூடு போட்டது!
அப்போது அது தற்காலிக தீர்வாயினும், வாலிப பருவமெய்தி இல்லறத்தில் அடியெடுத்து வைத்த அந்த சிறுமியின் வாழ்வில் அது ஒரு புனர் நிகழ்ச்சியானது. இல்லறத்தையும்;நல்லறத்தையும் சிதைத்துப்போட்டது.

பல காலம் கடந்து சில உண்மைகளை கண்டறிந்த போது அந்த சிறுமி தன் தந்தை ஒருவரை தாக்கியதையும் அதன் காரணமாக அவர் இறந்ததையும் கண்டிருக்கிறார்.

இப்படி ஒரு நிகழ்வின் பாதிப்பை வெளியேற்ற முடியாமல் அவர் அடக்கிவைய்ததே அவரது அந்த நிலைக்கு காரணம் என அறியப்பெற்றேன்.

காரணம் ; காரியம் - மனிதன்!

இப்படி ஒரு சம்பவத்தை மய்யப்படுத்தியது தான் சிவகுமார் சரிதா நடித்த "அக்னி சாட்சி"
மற்றொன்று அதே சிவகுமார் ராணிசந்திர நடித்த "பத்ரகாளி"ஆகும்.

என் பள்ளிபருவமும் அத்தகையது தான்.
குடும்ப சமூக சூழல் காரணமாக மனச்சோர்வும் , மன இறுக்கமும் என்னை ஆட்கொண்டது.
அதை சரியான தருணத்தில் கண்டறிந்த என் அம்மா ; என்னை மீட்டெடுக்க பல இமாலய முயற்சிகளை முன்னெடுதார்.
அப்படி ஒரு மருத்துவ முறையை எதோ தனியார் தொலைகாட்சியில் கண்டு விசாரித்து என்னை அங்கு அழைத்துச் சென்றார்.
பல நறுமணங்களுடன் ஊதுபத்தி மனமும் சூழ,கடவுள்கள்,சித்தர்கள்,நவீன சமகால மருத்துவர்கள் படங்கள் சூழ அமைந்திருந்தது அந்த வைத்தியச்சாலை!
உங்கள் பிரச்சினைகளுக்கு நாங்கள் மட்டுமே தீர்வு என்பதை போல் வரவேற்றார் அந்த வரவேற்பாளர்!!

மருத்துவர் வந்தாடைந்தார்.
பண்டைய சித்தரும் நவீன மருத்துவரும் கலந்த ஒரு உடல்மொழியமைப்பு.

அவர் தன் மருத்துவ பணியை / பாணியை விளக்குகையில்...

"உங்கள் பிரச்சனையை என்னானு கண்டுபிடிச்சி அதற்கான மருந்துகளை மலர்களின் இதழ்களில் இருந்து சாறு எடுத்து இதோ இந்த சக்கரை உருண்டைகளில் ஊறவைத்து உள்ளேற்றி கொடுப்போம்" என்றார்!
அத்தகைய மருந்துகள் உள்ளேற்றப்பட்ட குப்பிகளை காண்பித்தப்படி!!
"தீர்வு பெற சில கட்டங்களும் பல கட்டணங்களும்" ஆகும் என்றார் தொடர்கயில்.

மேலும் கூறுகையில்..

ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை எடுக்க வேண்டும்.

ஒரு நாள் ஒரு மாத்திரை ஜாஸ்தி போட்டுறீங்க இல்ல ஆர்வ மிகுதியில் எல்லா மாத்திரையையும் ஒரே நாள்ல போட்டுறீங்க என ஆகும்???என்றார்
ஒன்னுமே ஆகாது!! என்றார் அவரே!!

சரி வீட்ல இருக்க சின்ன குழந்தை இந்த மாத்திரையை விளையாட்டு போக்குல எடுத்து சாப்பிடுது! என்ன ஆகும்??
ஒன்னுமே ஆகாது!! என்றார் அவரே கேள்வியின் பதிலாக!
அடுத்து வீட்ல இருக்க பெரியவங்க , வயசானவுங்க இந்த மாத்திரையை தெரியாமல் சாப்பிட்டுராங்க என ஆகும்??
ஒன்னுமே ஆகாது!! என்றார் இம்முறையும் அவரது கேள்விக்கு அவரே பதிலாக!

அடுத்து அவரது கட்டணத்தை பற்றி விவரித்தார்.
அது எங்களுக்கு தலைச்சுற்ற,எதோ ஒரு காரணம் சொல்லி அந்த இடத்தை விட்டு கழன்று வந்தோம் நானும் அம்மாவும்!

பேருந்திற்கு காத்திருந்த வேளையில் பசியாற ஒரு தேநீர் விடுதி சென்று அமர்ந்தோம்.
தேநீர் வர குடித்துக்கொண்டே என் அம்மாவை பார்த்து "ஒன்னுமே ஆகாது" என உரக்க சொன்னேன் அந்த மருத்துவர் பாணியில்!!
கணீர் என சிரித்துவிட்டோம் இருவரும்.

நாங்கள் இருவரும்
சிரித்து கொண்டே இருந்தோம் அந்த நிகழ்ச்சி நடையை எண்ணி எண்ணி.

அப்படி நாங்கள் இருவரும் என்றுமே சிரித்ததில்லை! எங்களை மறந்து!!!

"எதுவுமே ஆகாதுன அது வியாதியை மட்டும் எப்படி குணப்படுத்தும்?? நம்ம வியாதிக்கு நாம தா ம்மா காரணமும் மருந்தும் " என்றேன் அறிவாளியாக!!

கண்டுபிடிச்சிடியா??
உனக்குள்ள இருந்து இந்த வார்த்தையை வெளிய கொண்டு வர தான் இத்தனை முயற்சி எடுத்தேன்!!
இனி உன் மனஅழுத்ததுக்கும் ; மனசோர்வுக்கும் மருந்து தேவையில்லை எனா நீயே காரணம்; நீயே மருந்து அதை தேடி போ !! என்றார் அம்மா

அந்த வார்த்தைகள் இன்றுவரை என்னை உந்துகோலாக முன்னோக்கி பயணப்படுத்துகிறது.

காரணமும் சூழலும் எதுவாயினும் அதற்கு நாமே தீர்வு!!

மனமே காரணம்! மனமே மருந்து!

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின் (20-Sep-21, 1:08 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 348

சிறந்த கவிதைகள்

மேலே