✨🌟மூன்று விண்மீன்கள்🌟✨

எப்போதும் போல இரவு உணவிற்கு பிறகு தூக்கம் வரவில்லை என வெளியே சென்று இயற்கையான காற்றை இரசித்தவாரே அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள் சவிதா..திடீரென அவள் நிமிர்ந்து வானைப் பார்த்துக் கொண்டே சிரித்தாள்...........

அவள் நினைவில் தோன்றியது..........

இன்று உன்னுடைய பிறந்த நாள் ஆனால் உன்னுடன் என்னால் அருகில் இருக்க முடியவில்லை..... பார்க்கவும் முடியவில்லை என தொலைபேசியில் வேதனையோடு பேசிக் கொண்டிருந்தாள் அன்று இரவு.

அதற்கு அஷ்வின்..... பரவாயில்லை விடு என சொல்லியும் புலம்பிக் கொண்டிருந்தாள்
அப்பொழுது சவி சவி சவி...........  நான்

*"உன்னுடன் தான் இருக்கிறேன்"*. *"உன்னைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்"*

என சொல்லி வானத்தை நிமிர்ந்து பார் என கூறினான். எங்கே எப்படி என கேட்க அதற்கு வானத்தில் மூன்று நட்சத்திரங்கள் மட்டும் தனியாக இருக்கிறதே பார்த்தாயா அது வேறு யாரும் இல்லை நீயும் நானும் தான் என கூறினான்......
அதன்பின்  பக்கத்தில் இன்னொருவர் யாரென முறைத்தவாறே😡 கேட்டாள் சவிதா...
அதற்கு சிரித்தவாறே பதில் கூறினான்😁😁 அஷ்வின்......

நல்லா பாரு சவி...............😉
Future Child என😜........❗❕ஆகாய போர்வைக்குள்
பல பேர் இருந்தாலும்

தனியாக
மூன்று பேர் இருக்க
துணையாக இருந்தவன் கூறினான்
அது

நீ 🙎‍♀️
நான் 👨‍🦱
நாம்👨‍👩‍👧 என......!!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (19-Sep-21, 10:40 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 237

மேலே