கள்ளி நொள்ளி
ஏன்டா சின்னத்தம்பி, உன் மனைவி கல்விக்கரசிக்கு (இ)ரட்டைக் கொழந்தைங்க பொறந்திருக்குதாமே.
#########
ஆமாம் சின்னப்பாட்டி.
#######
அப்பிடியா. ரொம்ப சந்தோசம்டா. நம்ம தமிழர் வழக்கப்படி கொழந்தைகளுக்கு இந்திப் பேருங்கள வச்சிட்டீங்களா?
########
இல்லீங்க பாட்டி. இந்திப் பேருங்கள அர்த்தம் தெரியாமலே தமிழர்களில் பெரும்பாலோர் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சு பெருமைப் படறாங்க. என்னைப் பொறுத்தவரை அர்த்தம் தெரியாத அல்லது அரத்தம் தெரியாம இருக்கிற பேரு எந்த மொழியா இருந்தா என்ன? நமக்கு இந்தியும் ஒண்ணுதான் லத்தின், கிரேக்க, ஜப்பானிய, ஸ்பானிஷ் மொழிகளும் ஒண்ணுதான். ஏன்னா நமக்கு நாஞ் சொன்ன எந்த மொழியும் நமக்குத் தெரியாது. அதானல நாங்க....
######
ஏன்டப்பா, (இ)ரட்டைக் கொழந்தைங்கன்னு சொன்ன. ஆண் கொழந்தைங்களா? பெண் கொழந்தைங்களா?
######
பெண் குழந்தைங்கதான் பாட்டி வச்சீட்டீங்களா?
#########
ஆமாம் சின்னப்பாட்டி. ஒரு குழந்தையோட பேரு கள்ளி. இன்னொரு குழந்தையோட பேரு நொள்ளி.
##########
என்னடா சின்னத்தம்பி தமிழ் பேருங்க மாதிரி உள்ளதே?
########
இல்லங்க சின்னப்பாட்டி. தமிழைப் போல மிகவும் பழமையான கிரேக்க மொழிப் பேரு ஒரு குழந்தைக்கு. இன்னொரு குழந்தையோட பேரு மெக்ஸிகோவில் ஒரு பழங்குடி மக்கள் பேசும் மொழிப் பேரு. அர்த்தம் தெரிஞ்சுதான் இந்தப் பேருங்கள எங்க செல்லக் குழந்தைகளுக்கு வச்சிட்டோம்.
##########
நல்லதுட சின்னத்தம்பி. நீ பெரிய படிப்புப் படிச்சவன். நீ நல்ல அர்த்தம் உள்ள பேருங்களா வச்சிருப்பீங்க. நல்லதுடா சின்னத்தம்பி. கொழந்தைங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். "வாழ்க பல்லாண்டு வளம் யாவும் பெற்று".
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Kalli = Beauty. Greek origin. Unisex name.
Nolli = Fire. Nahuatal origin. Unisex name. Nahua is an ethnic group.