அவள் முகம்

மாலை 5 மணி  இருக்கும், ஊர்ல இருந்து அத்தையும், அத்தை பையனும் வந்திருந்தார்கள். அப்பொழுது அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள், பின் சிலு சிலுவென காற்று அருமையாக வீசுகிறது என அத்தை கூற, எங்கேயோ பக்கத்தில் மழை பெய்கிறது என அம்மா கூறினாள்.
இப்படியே பேசிக் கொண்டு இருக்க மணி 6.30 ஆனது.

பின் திடீரென சல சலவென சத்தம் கேட்டது என்னவென்று வெளியே சென்று பார்த்தால் கம்பளிப் போர்வையை விரித்தது போல கருமேகம் சூழ்ந்து அங்கிருந்த மரங்கள் (Headphone) இல் பாடல் கேட்பது போல் இட , வலப்புறமாக அசைந்து அசைந்து காற்றில் ஆடிக்கொண்டிருக்க வடக்கே இருந்து தார் சாலை மட்டும் கொஞ்சம் கொஞ்சமா நணைந்து வந்து கொண்டே இருந்தது என்ன அவசரநிலையோ தெரியவில்லை ரயிலை ஓடி வந்து பிடிப்பதுப்போல வேகமாக வந்தது.

வெளியே இருந்த அனைவரும் மழை வருது மழை வருது என சத்தம் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள். பட்டாசு வெடிப்பது போல பட பட வென வந்த மழை கடைசியில் அமைதியாக பனித்தூவுவது போல் வந்தது. அந்நேரம் பார்த்து மின்சாரம் பளிச்சென்று மின்னி ( off )ஆனது.

பின் காயத்ரி மெழுகுவர்த்தியை தேடி எடுத்து தீக்குச்சியால் பற்ற வைத்து அத்தை பையன் கதிர் முன்னாடி  சிறு புன்னைகையுடன் சென்றாள்.,

கதிர் வியந்து பார்த்தான், இரவு நேரம் அடர்ந்த காட்டில் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது காயத்திரியின் முகம், மற்றும் மீனைப் போலவே அழகான இரு கண்கள், அரை நிலா திருப்பி வைத்ததுப்போல் இரு புருவங்கள் ,நெற்றியில் பட்டும் படாமல் சிறு வட்டமான பொட்டு , வள வளப்பான குண்டு கண்ணங்கள் அதில் சிறு சிறு புள்ளி வைத்தது போல சிவப்பு வண்ண முகப்பருக்கள் , மூக்கின் வலது புறம் ஒரு இணைப்பான மச்சம் , ஜிலேபி வண்ணத்தில் ஜிலேபி மேல் ஜீரா இருப்பது போல அழகிய உதடுகள் என சிறு ஒளியில்    " அவளது முகம் " பிரகாசமாக அழகாக இருந்ததை கண் இமைக்காமல் மனத்திற்குள் மின்சாரம் திரும்பி வர கூடாது என நினைத்தவாரே அவளை பார்க்கிறான் அவன் இருவிழியால்....!!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (18-Sep-21, 8:23 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
Tanglish : aval mukam
பார்வை : 400

மேலே