பவிதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பவிதன் |
இடம் | : வட்டக்கச்சி |
பிறந்த தேதி | : 16-Apr-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 478 |
புள்ளி | : 9 |
வண்ணம்: 123
****************
தான தத்த தான தத்த
தான தத்த தனதானா ( அரையடிக்கு )
மாம னுக்கு வாச மிக்க
மாலை யிட்டு மகிழ்வேனே
மாதெ னக்கு வீட ளித்து
வாழ்வு கிட்ட அருள்வானோ
நாம ணக்க யாழி சைத்து
நானு ரைக்க வரும்போது
நாவி னிக்க வாசை முத்து
நாடி யத்த னிடுவானோ
ஊமை யொத்த பேதை மெச்ச
ஊரை விட்டு வருவானோ
ஊடி நிற்கு மாறு சொக்க
ஊர டக்கி விடுவானோ
வீம முற்ற போது கட்டி
மீசை குத்த வணையானோ
மேனி தொட்டு மார்ப ணைக்க
வேறு சொர்க்கம் அறியேனே !!
வீமம் - அச்சம்
சியாமளா ராஜசேகர்
மனதோடு பேச்சு கனவோடு வாழ்க்கை
நிசமின்றி போச்சு எனவொரு புலம்பல்
இனியிங்கு வேண்டாம் இருளில் பயணம்
மனதோடு பேசி திடமான முடிவோடு
படியேற தயங்காமல் விடிவென்று எழுந்து
குடி வாழ்த்த முடி சூடுவோம்
கடல் அலை மோத
குன்றது நின்று சிரிக்கும்
இச்சிறு அலை மோதி என்
என் பெருந்தேகம் அழியமோ என்று,
இடைவிடா மோதாலால்
காலத்தின் பயணத்திலும்
பணியாத சிறு அலை
சிறுகச் சிறுகச் சிதைத்துவிடும்
பெரஞ்சிகரத்தை, நாமும்
இடைவிடா உழைப்பால்
உடைத்தெறிவோம் பெருந்தடையை.
திங்களில் மின்னும் பொன்னொளி உடைய
மங்கை உனை காணா மலரும்
நினைவுகள் நெஞ்சினில் மறையாது நாளும்
நங்கை உனை நினையா நிமிடங்கள்
எந்தன் கடிகாரத்தில் இல்லை அறிவாயா
சித்திரை வசந்தமாய் வந்த பூவழகே
மாரி மழையதை கண்களில் தந்த
பிறையொப்ப நுதலுடை பெண்ணே வெதும்புகிறேன்
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
கனவாகி போகாது நிசமாகி வருவாய்
வட்டக்கச்சி பவிதன்
திங்களில் மின்னும் பொன்னொளி உடைய
மங்கை உனை காணா மலரும்
நினைவுகள் நெஞ்சினில் மறையாது நாளும்
நங்கை உனை நினையா நிமிடங்கள்
எந்தன் கடிகாரத்தில் இல்லை அறிவாயா
சித்திரை வசந்தமாய் வந்த பூவழகே
மாரி மழையதை கண்களில் தந்த
பிறையொப்ப நுதலுடை பெண்ணே வெதும்புகிறேன்
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
கனவாகி போகாது நிசமாகி வருவாய்
வட்டக்கச்சி பவிதன்
அமுதும் அன்பும் ஊட்டும் அன்னை
என்னமுதே அன்னை என்பதே மெய்மை
ஐவிரு திங்களெனை தாங்கிய தாய்மை
என்னுயிர் தந்த இறையென்பதே உண்மை
பாரிலே தாயன்பு ஒன்றே வெண்மை
வட்டக்கச்சி நே.பவிதன்
வீழ்ந்து விட்டோம் நாங்கள் ஆனால்
வீழ்ந்தே விடப்போவதில்லை
பதுங்கி விட்டோம் நாங்கள் ஆனால்
தூங்கி விடப்போவதில்லை
பொறுத்திருப்போம் நாங்கள் ஆனால் உணர்வறுத்து வாழமாட்டோம்
சீற்றம் கொண்ட வேங்கைகள் நாங்கள்
சீறும் காலம் காத்திருப்போம்