தொடரும் நினைவுகள்

திங்களில் மின்னும் பொன்னொளி உடைய
மங்கை உனை காணா மலரும்
நினைவுகள் நெஞ்சினில் மறையாது நாளும்
நங்கை உனை நினையா நிமிடங்கள்
எந்தன் கடிகாரத்தில் இல்லை அறிவாயா
சித்திரை வசந்தமாய் வந்த பூவழகே
மாரி மழையதை  கண்களில் தந்த
பிறையொப்ப நுதலுடை பெண்ணே வெதும்புகிறேன்
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
கனவாகி போகாது நிசமாகி வருவாய்

வட்டக்கச்சி பவிதன்

எழுதியவர் : வட்டக்கச்சி பவிதன் (4-Aug-20, 12:23 pm)
சேர்த்தது : பவிதன்
Tanglish : thodarum ninaivukal
பார்வை : 264

மேலே