தோளை தழுவலாச்சே

துரித உணவுகள் தெருவெங்கும் பெருகியதால்
துக்கந்தரும் நோய்கள் தோளை தழுவலாச்சே
நீரில் அமிலஞ்சேர்த்து யாவருக்கும் வழங்கியதால்
குருதியில் எதிர்ப்புத் தன்மை குறுகி ஒடுங்கலாச்சே
மானத்தின் மதிப்பது மனதினில் குறைந்ததால்
மனிதனின் மகத்துவம் மாற்றமடைந்து சிதையலாச்சே
நாட்டுக்குரிய உடைகளில் நாகரீகம் புகுந்ததால்
நலங்காக்கும் நற்பண்புகள் நலிவுற்று சிதையலாச்சே
பணத்தின் மீதான பற்றின்பலம் பயங்கரமானதால்
பரிதவிப்போர் மன எண்ணங்கள் பரிகாச பொருளாச்சே
உணவுகளில் கலப்படங்கள் ஊடுறுவல் பெருகியதால்
உடல்களின் உறுதி தன்மை உடைந்து நொறுங்கலாச்சு
உடையவைகளில் உள்ளதை உளமாறக் கூறினாலும்
உள்ளவைகளை உடையாக்கும் உலகமாந்தர் ஏற்பாரோ
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Oct-20, 7:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 81

மேலே