மீனாள்செல்வன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மீனாள்செல்வன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jul-2019
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  10

என் படைப்புகள்
மீனாள்செல்வன் செய்திகள்
மீனாள்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2019 12:11 pm

தளிர்கொய்து கூடைகள் நிரப்பியபோது
உங்களிடம்
மரங்கள் தோற்றன….
ஏற்றங்கள்; மிதித்து
உயரங்கள் கடந்தபோது
உங்களிடம்
மலைகள் தோற்றன….

நின்று நிமிர்ந்த
விருட்சங்களைச் சாய்ப்பதாய்ப் புறப்பட்டு
நாணல்களை விழச்செய்த புயல்போல
தீவிரவாதிக்குக் குறிவைப்பதாய் அவசரப்பட்டு
அன்று பிறந்த
சிசுவை ரணமாக்கிய ராணுவம்போல
உங்களைக் கொன்று
மரணமும்
உங்களிடம்
தோற்றுத்தான் போனது!
- மீனாள்சொல்வன்

மேலும்

மீனாள்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2019 9:50 am

பொய்யைப் பார்த்து
தன்னை சரிசெய்துகொண்டது உண்மை
கண்ணாடியில் பிம்பம்!
- மீனாள்செல்வன்

மேலும்

மீனாள்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2019 9:08 am

கொடுத்தது கிடைத்ததா என்ற
கூட்டல் கழித்தல் இங்கில்லை
அகத்தினழகு முகத்திற் தெரியுமென
அகமோ புறமோ இரண்டில்லை

குற்றங் காணில் இடித்துரைக்கும்
குணத்திற்கின் னொரு நிகரில்லை
துன்பம் வந்தால் ஓடிவரும்
துணைக்குத் தெய்வமும் இணையில்லை!
- மீனாள்செல்வன்

மேலும்

மீனாள்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2019 4:26 pm

என் அம்மாவைப் போலவே
குடையை எடுத்துக்கொள்ளச் சொன்னது
வானம்!
- மீனாள்செல்வன்

மேலும்

மீனாள்செல்வன் - இளவல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2019 12:07 pm

தனித்து விடுவாயா

ஒரு மணித்துளி கூட உன் நினைவின்றி
கடக்க மறுக்கிறது
எல்லா காதல் பாடலும்
உனக்கானது போன்றே தோன்றுகிறது
மர இலை அசைவது கூட
மலர் உன் வருகையை சொல்வது போல் இருக்கிறது
கைபேசியின் ஒவொரு சிணுங்கலும்
உன் அழைப்பாகவே தோன்றுகிறது
எந்த வேலை செய்தாலும்
உன் நினைவு ஒரு ஓரமாய்
நதிபோல் ஓடிக்கொண்டே இருக்கிறது
உறக்கத்திலாவது உன்னை மறந்து விடுவேன் என்ற
என் எண்ணம் பொய்த்து போனது நீ
கனவு வழி வந்து என்னை காதல் செய்தபோது

என்னை தனித்து விடுவாயா -இல்லை
எப்போதும் தவிக்கவே விடுவாயா

மேலும்

நன்றி 09-Aug-2019 4:06 pm
அருமை 09-Aug-2019 2:45 pm
நன்றி நண்பரே உங்கள் பார்வைக்கும் பதிவிற்கும் 07-Aug-2019 11:17 am
அருமையாக இருக்கிறது! 06-Aug-2019 5:35 pm
மேலும்...
கருத்துகள்

மேலே