விரதம் என்பது

வெற்றி என்பது எதுவென்று நோக்கின்
விரும்பியதை நாடி அடைவது ஆகும்
விரதம் என்பது எதுவென்று அறியின்
விடாமல் வெற்றியை நாடுவது தானாம்
கொள்கை என்பது எதுவென்று கேட்பின்
உடையதை வைத்து வெல்வது தானாம்
கடமை என்பது எதுவென்று தெளியின்
கண்டவர்கள் மெச்சும் செயல் முடிவு தானாம்
உரிமை என்பது எதுவென்று ஆய்வின்
நமக்கென ஒதுக்கிய விலகா எதுவும்
தகுதி என்பது எதுவென்று பார்க்கின்
தடமாறாமல் நின்று முடிப்பது தானாம்
உண்மை என்பது எதுவென்று காண்கின்
உறுதியாய் நல்வழியில் செல்வது தானாம்
படிப்பு நமக்கு எதைக்கொடுக்க வேண்டுமென்றால்
பாதகம் செய்யா எண்ணத்தையேயாம்.
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Sep-20, 6:31 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : viratham enbathu
பார்வை : 59

மேலே