ஏழைப் பெண்
ஏழைப்பெண்
😚😚😚😚😚😚😚
புதுப்பொழுது சூரியனும்
புலர்ந்து வெளியில் வர
புதுநாளை வழிநடத்த
புறப்பட்டாவெள்ளையம்மா
நெலிஞ்சுபோன தேகுசாவில்
அழிஞ்சுபோக கரிதேச்சு
ஒழக்கழவு அரிசிபோட்டு
வழக்கமான நீர் நிறைச்சு
பனையோலை படலோரம்
பத்தவச்ச அடுப்புமேல
பத்தரமா தூக்கி வச்சி
தட்ட வச்சி. மூடிவச்சா
கத்தை விறகு எரிச்சுக்கூட
செத்த நேரம் வேகனுனு
நெருப்பு மேல பொடியவச்சி
பொருப்பாத்தான் எறக்கி வச்சா
குழம்பு ஒன்னு வக்கலான்னு
கொண்டு வந்த பருப்பு எடுத்து
ரெண்டு கையி அளந்து போட்டு
வண்டு மிதக்க நீர் நிறைச்சா
ஓட்டைபோட்ட பருப்பு எல்லாம்
போட்டி போட்டு மிதந்து வர
கையால வடிகட்டி
கழனி தண்ணி பிரிச்செடுத்தா
அடுப்பேத்தி கடைஞ்செடுக்க
பருப்பு கொழம்பு ரெடியாச்சு
நூறு நாள் வேளைபோக
நேரமாச்சு வெள்ளையம்மா
பழனியம்மா போட்ட சத்தம்
படலை தான்டி கேட்டிடுச்சு
அப்பனுக்கு போட்ட சோத்தை
கட்டில்கிட்ட வச்சிபிட்டு
பக்கத்தில சொம்பிருக்கு
பசிச்சப்ப சாப்பிடுனு
பெத்த கடனை தீர்த்துப்புட்டு
அட்டை எடுத்து பையில் வச்சா
அரை வயிரு சோத்தோட
மயிர் வாரி முடிஞ்சிகிட்டு
அவசரமா கிழம்பும்போது
செருப்பு வாறு அறுந்துருச்சு
பழையகால பாரகானை
பையில் ஒன்னை வச்சிகிட்டு
கையில் ஒன்னை வழிநெடுக
தையல் போட்டா கம்பியால
அட்டை வாங்கி பேர்பதிஞ்ச
அலமேலு சத்தம்போட்டு
இதிலிருந்து முனு மீட்டர்
இன்னைகத்த வேலை சொல்ல
அன்று செஞ்ச அசிங்கத்தையும்
அல்லவேனும் என்ன சொல்ல
நாலு மணிக்கு வீடு போயி
பாலு சேரா காபி வச்சு
குடிச்சு எழுந்தாக்க
கும்மிருட்டு கட்டிவிட
மின்னலோட இடிஇடிச்சி
மிரட்டவச்ச நேரத்துல
மழைவந்தா சன்னல் நேரா
மறுபடியும் ஒழுவுமேனு
கூடை போட்டு மேல ஏறி
ஒலை ஒன்னும் சொருகி வச்சா
மீந்த சோத்தைபங்கு போட்டு
நேந்து நிறைஞ்சு திங்கும்போது
ஆந்தை போட்ட சத்தத்தோட
அடைமழையும் தொடங்கிருச்சு
கயிறு நிறைய முடிச்சு போட்ட
கட்டிலிலே விரிச்சிபோட
பங்காளி சண்டை போல
பலவாக்கிலும் போர்வை போக
இழுத்திழுத்து ஒன்னு சேத்து
இப்பத்தான் கயிர் மறைச்சா
படல் கயித்தை கட்டி வந்து
படுக்கையில படுத்ததுமே
மாடி வீட்டில் இறங்கி வந்து
ஆடிக்காரில் ஏற்வதுபோல்
அவளுக்கும் ஒரு கனவு
விடியும் வரை மன நிறைவு
க.செல்வராசு....
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑.