அழைப்புகள்

தோழரே என்றது கம்யுனிசம்
நுகர்வோரே என்றது கேபிட்டலிசம்

குழந்தைகளே என்றது கிறித்துவம்
சகோதரா என்றது இஸ்லாம்

பக்தர்களே என்றது இந்துயிசம்
புத்தர்களே என்றது புத்திசம்

பாட்டாளி என்றது சோசியலிசம்
வாக்காளர் என்றது ஜனநாயகம்

எத்தனை அழைப்புகளில்
எப்படி சிக்கி கொண்டாலும்
சிகிச்சை பலனின்றி
சிதைவது மானுடம்

எழுதியவர் : ஆழிசரன் (11-Mar-19, 11:54 pm)
சேர்த்தது : ஆழிசரன்
பார்வை : 155

மேலே