விடுகதை

வெளிரும் ஒளியில் பகலாவேன்
துளிரும் மலரில் துகளாவேன்

பெய்யும் மழையில் துளியாவேன்
செய்யும் செயலில் வெளியாவேன்

இரவில் இருளில் நிலவாவேன்
உறவில் உன்னில் அன்பாவேன்

கருவில் சிசுவின் தாயாவேன்
தெருவில் தென்றல் காற்றாவேன்

நான் யார்?

எழுதியவர் : ஆழிசரன் (14-Apr-19, 11:00 am)
சேர்த்தது : ஆழிசரன்
Tanglish : vidukathai
பார்வை : 439

மேலே