விழி சிறை

அகண்ட உலகில்
அடிமையாய் அகபட்டேன்
அவள் விழி சிறையில்..........
முகம் பார்த்ததில்லை
கண்களின் கவிகளை மட்டும்
காதலித்தேன்.......
முகத்திரை அகற்ற மறுப்பவள்
விழித்திரையில்
வீழ்ந்திட்ட என் விழிகள்........
பறந்திடும் கரும் பட்டாம் பூச்சி
வட்டமிடும் அவள் கண்கள்
வசீகர பார்வை........
கண்களில் விழுந்த -என்
காதல் கவிதையில்
காலம் செல்கிறது
ஆதாயம் தேடும் உலகில்
ஆகாரம் இன்றி அலைகிறேன்
அழகிய விழி கொடுத்த கனவில்.......
-மூ.முத்துச்செல்வி