என் மாவட்டம்
வட்டமிடும் வண்ண நிலா
வானுயர எட்டி பார்க்கும்
விண்ணை தொடும் எங்கள்
பனிமய மாதா ஆலயத்தை
எப் பிரிவினரும் வந்து போவர்
நீல வெள்ளை ஆலயத்தை பார்க்க.......
பார்ப்பவை எல்லாம் வெள்ளை
உப்பு விளையும் எங்கள் மண்ணில்
ரோசக்காரன் இம்மண்ணில்
வாழும் வீரன் அதனால்தான்
வீரபாண்டியனும்
தூக்கில் தொங்கினான்
அடிமையை எதிர்த்து........
மனதை வருடும் எங்கள்
கடல் தாயின் இசை
மாலை வருடும் தென்றல்
பூமி தேவி தந்த பரிசு
எங்கள் கடற்கரை அலையோசை........
பார்பவரை மயக்கும்
முக்கோண மக்ரூன்
இனிய சுவைக்கு எங்கள் ஊர்
மஸ்க்கோத்து அல்வா
இவைக்கு ஈடு எவை
முருகன் வசிக்கும் ஆலயம்
எம் திருச்செந்தூர்
நபிகள் வசிக்கும் புனித மண்
எம் காயல்பட்டணம்.....
மும் மத ஒற்றுமை
நட்பில்.......
தமிழ் நாயகன்
பாரதி வாழ்ந்ததும்
இங்கேதான்......
கப்பல் வீரன்
வ.உ.சி வாழ்ந்ததும்
இங்கேதான்........
-மூ.முத்துச்செல்வி