எனக்கு மரியாதை கொடுங்க

எனக்கு மரியாதை கொடுங்க அப்பா.


@@@@@@

நீ எங்க பையன். உனக்குத் 'தங்கம்'னு பேரு

வச்சிருக்கிறோம். உனக்குத் தேவையான

எல்லாத்தையும், ஆசைப்படற

அனைத்தையும் நீ கேட்கிறதுக்கு

முன்னாடியே வாங்கித் தர்றோம்.

@@@@@

அதெல்லாம் நீங்க என் மேலே காட்டற

அன்பு. என் பேருள்ள மரியாதை இல்லை.

@@@@@@

பேருல என்னடா மரியாதைடா தங்கம்?

@@@@@@

நான் வெறும் தங்கம். அது என் தன்மானம்

தொடர்புடையது. என் பேருள்ள எனக்கு

மரியாதை வேணும்.

@@@@@@@@

அதுக்கு நாங்கள் என்னடா செய்யணும்

தங்கம்?

@@@@@@@

தங்கம். தங்கம். தங்கம்னு என்னைக்

கூப்பிட்டு அவமதிக்கிறீங்க. எனக்குத்

தேவை பேருல மரியாதை.

@@@@@@@

பேருல மரியாதை. எங்களுக்கு நீ

சொல்லறது புரியல. விளக்கமாகச்

சொல்லுடா தங்கம்.

@@@@@@

விளக்கம் தேவையில்லை. சுருக்கமாகச்

சொல்லறேன். எனக்கு மரியாதை தர்றதா

இருந்தா என் பேரைத் 'தங்கர்'னு மாத்துங்க.

@@@@@@

அட உன் ஆசை. இனிமேல் நீ தங்கர்.

போதுமா தங்கர்.

@@@@@@

இதுதான் பேருல மரியாதை.

எழுதியவர் : மலர் (27-Nov-24, 6:56 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 39

மேலே