என் ஆசை

உன் மூச்சுக்காற்று

தென்றல் ஸ்பரிசத்தில்

வாழ்ந்திட ஆசை...உன் கண்களில்

அழகிய பிம்பமாய்

இருந்திட ஆசை...உன் நெற்றி

வியர்வையில் துளிகளாய்

விழுந்திட ஆசை...உன் உதடின்

கொஞ்சிடும் முத்தங்களாய்

சிந்திட ஆசை...உன் இதய துடிப்பில்

என் பெயர்

துடித்திட ஆசை...உன் பாதங்கள்

படைக்கும் பாதைகள்

நானாக ஆசை...- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (8-Feb-19, 6:45 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : en aasai
பார்வை : 198

மேலே