jayapraba - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : jayapraba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 3 |
அவளை அவன் வருணித்தால் அவன் -கவிஞன்.
அவனை அவள் வருணித்தால் அவள் - கழிசடை.
குடித்தான் மதுவை கடையில் ..
அடித்தான் அவளை வீட்டில் !
தப்பு செய்தவன் அவன் ...
தண்டனை மட்டும் அவளுக்கு !
அன்று நடந்ததை அடுத்த வீட்டில் பேசினாள்...
அது ஊர் வம்பாம் !
என்றோ நடந்ததை எல்லா இடங்களிலும் பேசுவான்...
அது நாட்டு நடப்பாம் !
ஒரே வீட்டில் மனைவியும் துணைவியும் வாழ்வார் அவனுடன்! இரண்டு
இரண்டு கணவன்களுடன் அவளை ஏற்றுக்கொள்ளுமா இவ்வுலகம்?
கணவனை இழந்தால் அவள் விதவை!
மனைவியை இழந்தவனுக்கு பெயர்???
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்த தமிழில் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்ல
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் !
ஓங்கி உயர்ந்த கோபுரங்கள் ...
பறவைகள் பாதுகாப்பாக அமர்ந்துகொள்ளவும் எச்சமிடவும் ...
மனிதன் கடவுளைக் காக்க மறந்தாலும்
கடவுள் பறவைகளைக் காக்க மறப்பதில்லை...
எனவே..
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் !
பறவைகள் மொழி!
அந்த ஒற்றைக் காத்தாடி
தன் வால்களை ஆட்டிக்கொண்டு
விசுக் விசுக் என விண்ணில் சீறிப்பாய்ந்து
எதைத் தேடுகிறது?
இத்தனை உயரத்தில் பறக்கும் நான்
என் நட்புகளை தொலைத்த இடம் எங்கே என்றா ?
சுற்றிப் பார்க்கிறதோ சுற்றம் எங்கே என்று?
தற்போது வட தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தபின் கண்முன்னே அதிகம் தெரிந்தது குப்பை மேடுகள். குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள்.
விற்பனை செய்யும் வரை மக்கள் பயன்படுத்திக்கொண்டே தான் இருப்பார்கள். எனவே இந்த மட்காத குப்பைகள் சேர்ந்துகொண்டே இருக்கும் . இவை சாக்கடை , நீர்வடியும் துளைகளை அடைத்துக்கொண்டு சிறு மலை வந்தால் கூட வெள்ளம் வடியும் வழிகளை அடைத்து மிகுந்த துயரத்தையும், தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன.
எனவே பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கட்டுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகத்திற்கும் விற்பனைக்கும் கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் செயல்படுத்த வேண்டும் என பொ