பிளாஸ்டிக் உபயோகம் கட்டுப்பாடு சட்டம் தேவை
தற்போது வட தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தபின் கண்முன்னே அதிகம் தெரிந்தது குப்பை மேடுகள். குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள்.
விற்பனை செய்யும் வரை மக்கள் பயன்படுத்திக்கொண்டே தான் இருப்பார்கள். எனவே இந்த மட்காத குப்பைகள் சேர்ந்துகொண்டே இருக்கும் . இவை சாக்கடை , நீர்வடியும் துளைகளை அடைத்துக்கொண்டு சிறு மலை வந்தால் கூட வெள்ளம் வடியும் வழிகளை அடைத்து மிகுந்த துயரத்தையும், தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன.
எனவே பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கட்டுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகத்திற்கும் விற்பனைக்கும் கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகிறேன்.
இப்படிக்கு
ஜெயப்பிரபா.நா
பிளாஸ்டிக் உபயோகம் கட்டுப்பாடு சட்டம் தேவை மனு | Petition at Eluthu.com