சுகாதாரமற்ற பொதுக் கழிப்பிடங்கள்
பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
சுகாதாரமற்ற பொதுக் கழிப்பிடங்கள் மனு | Petition at Eluthu.com