அவனும் அவளும்
அவளை அவன் வருணித்தால் அவன் -கவிஞன்.
அவனை அவள் வருணித்தால் அவள் - கழிசடை.
குடித்தான் மதுவை கடையில் ..
அடித்தான் அவளை வீட்டில் !
தப்பு செய்தவன் அவன் ...
தண்டனை மட்டும் அவளுக்கு !
அன்று நடந்ததை அடுத்த வீட்டில் பேசினாள்...
அது ஊர் வம்பாம் !
என்றோ நடந்ததை எல்லா இடங்களிலும் பேசுவான்...
அது நாட்டு நடப்பாம் !
ஒரே வீட்டில் மனைவியும் துணைவியும் வாழ்வார் அவனுடன்! இரண்டு
இரண்டு கணவன்களுடன் அவளை ஏற்றுக்கொள்ளுமா இவ்வுலகம்?
கணவனை இழந்தால் அவள் விதவை!
மனைவியை இழந்தவனுக்கு பெயர்???
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்த தமிழில் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை !!!
அந்தோ பரிதாபம்!
பெண்களை கவி என வேண்டாம்.. கழிசடையாகவும்...
அவள் தண்டனைக்கு தயார் அவன் சரியானவனாக இருந்தால் ...
நாடு நம்முடையது எல்லோரும் நடப்பை பேசலாம் ...
அவளுக்கு துணைவன் தேவை இல்லை அவனும் தன்னை கட்டுப்படுதிக்கொண்டால் தவறில்லையே ?
அவனும் அவளும் இனி அவர்கள் ஆகலாம் !!!
ஜெயா