ஒற்றை சுரமாய்
ஒற்றைச் சுரமாய்!
இசை சுரங்களிலே..
ஒற்றை சுரமாய்! 1
பூக்களிலே…
ஊமத்தையாய்!
ஓவியங்களிலே…
வெறும் கிறுக்கல்களாய்!
கவிதைகளில்..
புலம்பல்களாய்!
தலையணைகளுக்கு
ஓர் ஆதரவாய்!
சன்னல் கம்பிகளுடே..
சரித்திரமாய் !
பழங்களிலே…
இலவமாய்..!
கனவுகளில்..
பகற்கனவுகளாய்
தாபத்தின் தகிப்பிலும்..
காமத்தின் கொதிப்பிலும்…
களர்நிலங்களாக…..…
காத்திருக்கும் எங்களுக்கு
உணர்வுகளின்
வடிகாலாய்….
உற்றதொரு
துணை தேவை!
ஏக்கமுடனே…….
முதிர்கன்னிகள்.!
கே. அசோகன்.